இரவு நேரங்களில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட பலே கில்லாடிகள் 3 பேர் கைது: மேலும் 3 பேர் தலைமறைவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 28 July 2024

இரவு நேரங்களில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட பலே கில்லாடிகள் 3 பேர் கைது: மேலும் 3 பேர் தலைமறைவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை!

வேலூர், ஜூலை 28

வேலூர் மாவட்டம் காட்பாடி மற்றும் விருதம்பட்டு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வரும் நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் கடந்த 26:07:2024 அன்று இரவு 10:30 மணியளவில் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த மேகநாதன் மகன் கார்த்திகேயன்(வயது 43) என்பவர் விருதம்பட்டு சந்திப்பு அருகே இரவு கடை நடத்தி வருகிறார். அவரிடம்  4 பேர் கொண்ட கும்பல் நாங்கள் ரவுடிகள் பணம் இல்லாமல் சாப்பிட உணவு கொடுக்குமாறு கேட்டு கார்த்திகேயனை மிரட்டி உள்ளனர். கடைக்காரர் இலவசமாக உணவு தர  மறுக்கவே அவரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி கடைக்காரரின் இருசக்கர வாகனத்தில் இருந்த ரூ.4.500/-ஐ எடுத்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர் . 

இதற்கிடையில் அன்று இரவு அதிகாலை 2:02 மணியளவில் 
ராணிப்பேட்டை மாவட்டம், பெரியதாங்கல் பகுதியைச் சேர்ந்த 
ஏழுமலை மகன் விவேக் (வயது 33)  என்பவர்  விருதம்பட்டு பெட்ரோல் பங்க் எதிரில் சிறிது நேரம் ஓய்வு எடுக்க பால் வண்டியை நிறுத்தி விட்டு ஓய்வு எடுத்தார். அப்போது அந்த வழியாக வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரிடம் இருந்த சுமார் ரூ.19405/- ஐ பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். 

உடனே இதுகுறித்து விரும்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் உத்தரவின் பேரில், காட்பாடி உட்கோட்ட துணை காவல்  கண்காணிப்பாளர் சரவணன், அறிவுறுத்தலின் பேரில்,  காட்பாடி வட்ட காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில், விருதம்பட்டு காவல் உதவி ஆய்வாளர் ஆதர்ஷ் மற்றும் 
காவல் துறையினர்  (28:07:2024) அன்று காலை 9.05 மணிக்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது விருதம்பட்டு அடுத்த தண்டலகிருஷ்ணாபுரம் ரயிவே கேட் பகுதியில் செல்லும் போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த மூன்று பேரை அழைத்து விசாரணை செய்தனர். விசாரணையில் மூவரும் முன்னுக்குப்  பின்  முரணாக பதில் அளித்தனர். உடனே அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தியதில் அவர்கள் விருதம்பட்டு மோட்டூர் பகுதியைச் சேர்ந்த தனசேகர் மகன் சந்தோஷ் (வயது 22 ), விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த விஷால் (வயது 19), மோட்டூர் பகுதியைச் சேர்ந்த மதன் (வயது 21)ஆகிய மூன்று பேர் என தெரியவந்தது.மற்றும் 3 பேர் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. ஆக மொத்தத்தில் 6 பேர் சென்று தான் கடந்த 26:07:2024 அன்று இரவு கடைக்காரர் மற்றும் பால் வண்டி ஓட்டுநரிடம் இருந்து பணத்தை பறித்ததை ஒப்பு கொண்டனர். உடனே மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்..நீதிபதி உத்தரவின் பேரில் மூவரும் வேலூர மத்திய சிறையில் காவலில் ஆடைக்கப்பட்டனர். 
தலைமறைவாக உள்ள மூன்று பேரை விருதம்பட்டு காவலர்கள் தீவிரமாக வலை வீசி  தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ 3000/- ஐ போலீஸார் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad