வேலூர் தீயணைப்புத்துறை பாகாப்பு அதிகாரியாக மருத்துவர் இக்ரம் நியமனம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 28 July 2024

வேலூர் தீயணைப்புத்துறை பாகாப்பு அதிகாரியாக மருத்துவர் இக்ரம் நியமனம்

வேலூர் ஜுலை 28

வேலூர் மாவட்டம் தீயணைப்பு துறை பாதுகாப்பு அதிகாரியாக வேலூர் மாநகரை சேர்ந்த டாக்டர் அ.மு.இக்ரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் அவசரகால சிகிச்சை, முதலுதவி மற்றும் பொது மருத்துவ முகாம்களை நடத்தி தீயணைப்பு வீர்ர்களுக்கு உதவிட வேலூரை சேர்ந்த டாக்டர் அ.மு.இக்ரம் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்ப்ட்டுள்ளார்.  அதற்கான நியமன உத்தரவை காவல் துணைத்தலைவரும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநருமான ஆபாஷ்குமார் வழங்கினார். அப்போது குமரன் சீனிவாசன், வெல்டன் ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் அ.மு.இக்ரம் இந்திய மருத்துவ சங்கத்தின் சி.எம்.சி கிளையின் செயலாளராகவும், வேலூர் மாவட்ட காவல்துறை சாலை பாதுகாப்பு குழுமத்தின் செயலாளராகவும், ஊர்க்காவல்படையின் துணைத்தலைவராகவும், இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில துணைத்தலைவராகவும், காவல்துறையின் போக்குவரத்து குழுமத்தின் முதன்மைக் காப்பளராகவும் பணியாற்றி உள்ளார்.  இவருக்கு தமிழ்நாடு அரசின் மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருது பெற்றுள்ளார்.  அமெரிக்க நாட்டில் உள்ள தீயணைப்பு துறையில் 15 நாட்கள் சிறப்பு பயிற்சியும் பெற்றுள்ளார்.
அவருக்கு இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி கிளையின் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு உள்ளிட்டோர் பாராட்டினர்.


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad