குடியாத்தம் ஜூலை 19
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை போடி பேட்டை ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆடி முதல் வெள்ளி திருவிழா அம்மனுக்கு திரு கல்யாணமும் அன்னதானமும் இன்று நடைபெற்றது.
காலை 8 மணி அளவில் போடி பேட்டை நீர் தேக்க நிலை அருகில் இருந்து நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி அவர்கள் முன்னிலையில் கரக ஊர்வலம் புறப்பட்டு கோவில் வந்து அடைந்தது பகல் ஒரு மணிக்கு கூழ் வார்த்தலும் பம்பை சிலம்பாட்டமும் நடைபெற்றது.
20 7 2024 சனிக்கிழமை அன்று அம்மனுக்கு 158 கும்பாபிஷேகமும் அன்னதானமும் இரவு 9:00 மணிக்கு நையாண்டி மேளதாளங்களுடன் ஸ்ரீ முத்துமாரியம்மன் பூப்பல்லுக்கு திருவிழா உலாவும் 21 7 2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி அளவில் ஸ்ரீ முத்துமாரியம்மன் மஞ்சள் நீராட்டு விழாவும் அம்மன் வீதி உலாவும் பம்பை மேளமும் சிலம்பாட்டமும் நடைபெறும்
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராகள் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலுவிஜயன்த லைவர் எஸ் சௌந்தர்ராஜன் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி ஆகியோர் பங்கேற்க்க உள்ளார்கள்
இதில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய நிர்வாகிகள் தலைவர் வி பி தாமோதரன் செயலாளர் ஆட்டோ மோகன் எம் சி துணைத் தலைவர் என் பன்னீர்செல்வம் துணைத் செயலாளர்கள் எம் செல்வம் எம் லட்சுமணன் மற்றும் விழா குழுவினர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment