42.36 லட்சத்தில் கட்டப்பட்ட இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் தமிழக முதலமைச்சர் காணொளி மூலமாக திறப்பு - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 19 July 2024

42.36 லட்சத்தில் கட்டப்பட்ட இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் தமிழக முதலமைச்சர் காணொளி மூலமாக திறப்பு

குடியாத்தம் ஜூலை 19

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம், அரசினர்  மேல்நிலைப்பள்ளி அக்ராவரம் பள்ளி கல்வித்துறை ரூபாய் 42.36 இலட்சம் மதிப்பில் நபார்டு நிதியின்கீழ் கட்டப்பட்டுள்ள 2 புதிய கூடுதல் வகுப்பறை  கட்டிடங்கள் திறப்பு விழா தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

இதில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலுவிஜயன் MLA அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் 
கோட்டாட்சியர் S.சுபலட்சுமி
குடியாத்தம் ஒன்றிய பெருந்தலைவர் ஒன்றிய கழக செயலாளர் N.E.சத்யானந்தம் ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் பொதுப்பணி துறை அதிகாரிகள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad