குடியாத்தம் ஜூலை 20
வேலூர் சி.எம்.சி.மருத்துவமனை, குடியாத்தம் கே. எம். ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் இணைந்து நடத்திய ரத்ததான விழிப்புணர்வு பேரணி
இன்று 19.07.2024,காலை 7-மணிக்கு வேலூர் ஊரிசு கல்லூரியில் தொடங்கி மாநகரில் முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியாக அண்ணா கலையரங்கத்தில் நிறைவு பெற்றது.
இப்பேரணியில் ரத்த தானம் செய்வதன் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்த வாசகங்கள் கொண்ட பதாகைகளை பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 400 மாணவ மாணவிகள் ஏந்திக்கொண்டு
ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை
ஏற்படுத்தினார்கள்.சி.எம்.சி.மருத்துவமனை ரத்ததான கழகம் சார்ந்த அதிகாரிகள், மருத்துவர்கள் ,
வேலூர் மாவட்ட காவல் துறையை சார்ந்த அதிகாரிகள் கலந்துக் கொண்டு மாணவ மாணவிகளுக்கு
சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு
வழங்கி விழாவை சிறப்பித்தார்கள்.
கே.எம்.ஜி. கல்லூரியின் செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் வே.வினாயகமூர்த்தி மற்றும் செஞ்சுருள் சங்க உறுப்பினர் முனைவர் எஸ்.செல்வராஜ் ஆகியோர் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment