குடியாத்தம் ஜூலை 12
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காக்கா தோப்பு பகுதியில் அத்தி மருத்துவமனையில் 4 வது கிளை இன்று கார்த்திகேயபுரம் பாலாஜி திருமண மண்டபம் எதிரில் துவங்கப்பட்டது.
இதில் அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் சௌந்தர்ராஜன் அவர்கள் தலைமை தாங்கினார்.
மருத்துவமனையை திறந்து வைத்து குடியாத்தத்தில் துவக்கப்பட்டுள்ள அத்தி மருத்துவமனையில் அனைத்து தர மக்களுக்கும் குறைந்த செலவில் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படும் என்றும்
போதைப் பொருட்களுக்கு அடிமையாகவும் நபர்களுக்கும் சிகிச்சை அளிக்க தனி பிரிவு துவக்கப்படும் என்றும் அத்தி மருத்துவமனையின் தலைமை ஆலோசகர் டாக்டர் ஏ கென்னடி அவர்கள் முன்னிலை வகித்தார்.
மேலும் அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் கே தங்கராஜ் அத்தி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் எம் பால்ராஜ் சீனி துரை மற்றும் குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கே குமரவேல் ஆகியோர் உடன் இருந்தனர் அத்தி மருத்துவமனை அத்தி மருத்துவமனை மருத்துவர்கள் சண்முகப்பிரியா கீர்த்தனா செவிலியர் கல்லூரியின் துணை முதல்வர் அருணா அற்புதம் ஆகியோர் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment