குடியாத்தம் ஜூலை 12
வேலூர் மாவட்டம் குடியாத்தம்
செதுகரை பெருமாள் கோயில் தெரு பகுதி சேர்ந்தவர் கணேசன் (வயது 50) நகைக்கடையில் கூலி வேலை செய்து வருகிறார் இவருக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணமாகி கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இதை அடுத்து இரண்டாவது திருமணம் செய்ய பெண் பார்த்து வந்தார். இதேபோல் சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணம் ஆகி மூன்று வயதில் பெண் குழந்தை இருந்தபோது கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு விவாகரத்து பெற்று இவரது பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். இவருக்கும் இரண்டாவது திருமணம் செய்ய அவரது பெற்றோர்கள் வரம் தேடி வந்த நிலையில், கணேசனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இரண்டாவது திருமணம் நடந்தது.
இதை அடுத்து தனது மூன்று வயது குழந்தையை சென்னையில் உள்ள அவரது பெற்றோர்களிடம் பாதுகாப்பில் வளர்த்து வந்துள்ளனர். இதனிடையே தனது மகளை அடிக்கடி அந்த பெண் சந்தித்து வந்துள்ளார் மேலும் செதுக்கரையில் உள்ள வீட்டுக்கு அழைத்து வந்து விடுமுறை நாட்களில் பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூன் 10 ம் தேதி குடியாத்துக்கு வந்த அந்த சிறுமி திடீரென உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஊசி போட்டுக் கொண்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார் அப்போது கணேசன் அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார் இதையடைத்து இது குறித்து வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டி உள்ளார். தொடர்ந்து இவர் அடிக்கடி அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது அடுத்து சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தாத்தா வீட்டுக்குச் சென்ற அந்த சிறுமி நடந்ததை குறித்து தெரிவித்துள்ளார் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாத்தா ரவி குடியாத்தம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார் அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கணேசன் கைது செய்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment