குடியாத்தம் ஜூலை 12
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி தலைமை தாங்கினார் நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன் முன்னிலையில் வகித்தார்
கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் நெடுமாறன் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சிகள் வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமா சங்கர்
பேரணாம்பட்டு வட்டாட்சியர் விநாயகமூர்த்தி ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் வெங்கடேசன் வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன்
தலைமையிடத்து துனை வட்டாச்சியா் உதயகுமார் வனத்துறை அலுவலா் வினோபா மற்றும் பல துறை அலுவலா்கள் பங்கு ஏற்றனா்
இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
மோர் தானா அணையை சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும்
நகர்புற சமுதாய கூடம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும்
வெள்ளேரி முதல் ஜிட்டபல்லி வரை சாலைகள் குண்டு குளியுமாக உள்ளது சீரமைக்க வேண்டும்
வனவிலங்குகளில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள் இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் கே வி குப்பம் பேர்ணாம்பட் போன்ற பகுதிகளிலிருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment