குடியாத்தம் ஜுலை 14
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மேல்முட்டுகூர் மதுரா தட்டாங்குட்டை பகுதியை சேர்ந்த செல்வன். மாதேஷ் (வயது 14) த/பெ கபிலநாதன் என்பவர் இன்று இரவு சுமார் ஏழு மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உடனடியாக அவரை பாலாறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிய வருகிறது. மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின்பு அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது பிரேதம் உடற்கூறாய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது
இறந்த நபரின் தந்தை கபிலநாதன். என்பவர் வெளிநாட்டில் வேலை செய்வதாகவும் அவரது மனைவி புவனேஸ்வரி என்றும் அவர்களுக்கு மூத்த மகன் ஒருவர் உள்ளதாகவும் அவர் தற்போது சென்னையில் பயின்று வருவதாக தெரிய வருகிறது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment