அற்பணிப்பு உணர்வுடன் பணி செய்த தேஜோமூர்த்திக்கு மகாவிஸ்வகர்மா விருது வழங்கி பாராட்டு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 28 July 2024

அற்பணிப்பு உணர்வுடன் பணி செய்த தேஜோமூர்த்திக்கு மகாவிஸ்வகர்மா விருது வழங்கி பாராட்டு!

வேலூர் ஜுலை 28


வேலூர் மாவட்டம் தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கத்தின் தலைவர் சி.தேஜோமூர்த்தி அவர்களின் அற்பணிப்பு பணிகளை பாராட்டி நம்பர் ஒன் இயக்கத்தின் சார்பில் மகா விஸ்வகர்மா விருது வழங்கி பாராட்டப்பட்டார். 
இதற்கான விழா இன்று 28.07.2024 மாலை 4 மணியளவில் வேலூர் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள ஆவனா இன் கூட்ட அரங்கில் நடைபெற்றது.  விழாவிற்கு ஒருங்கிணைப்பாளர் ஞான.நடராஜன் தலைமை தாங்கினார்.    முன்னதாக நிறுவனர் செயலாளர் செ.நா.ஜார்த்தனன் வரவேற்று பேசினார். 
விருது வழங்கி பாராட்டு
சங்கத்தின் தலைவர் வேலூர் தொழிலாளர் துணை ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற சி.தேஜோமூர்த்தி, அவர்களின் சமூக சேவை, அற்பணிப்பு உணர்வுடன் செய்த பணிகளை பாராட்டி சால்வை அணிவித்து கேடயம் அளித்து மகா விஸ்வகர்மா விருதுகளை பொதுச்செயலாளர் எஸ்.முத்துரட்சகன், செயலாளர் ஜெனார்த்தனன் ஆகியோரால்  வழங்கி கௌரவிக்கப்பட்டார்.  
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அரசு வழக்கறிஞர்  வை.நடனசிகாமணி, துணைத்தலைவர் எல்.பன்னீர்செல்வம், பொருளாளர் ஜெ.மணிஎழிலன், இணை செயலாளர்  எம்.செல்வராஜ், செயற்குழு உறுப்பினர்கள் கே.குப்பன், எஸ்.ஜெகதீசன், எஸ்.சக்ரீஸ்வரன், ஜி.கார்த்திகேயன், எம்.சீனிவாசன், ஆவனா இன் அரங்கத்தின் மேலாண்மை இயக்குநர் சீனிவாசன், கருணாகரன், பத்மநாபன் பி.செந்தில், பி.சந்திரசேகரன், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் காஞ்சிநாதன், ஆதிகேசவன், அசோகன், மகாதேவன், ராமு ஆகியோர் பாராட்டி பேசினர்.

பின்னர்  ரோட்டரி சங்க தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ள சட்ட ஆலோசகர் வை.நடனசிகாமணி அவர்களுக்கும் சால்வை அணிவித்து பாராட்டப்பட்டார்.
நம்பர் ஒன் இயக்கத்தின் விருதினை பெற்ற சி.தேஜோமூர்த்தி ஏற்புரையாற்றியாற்றினார்.
முடிவில் வி.கருணாகரன் நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad