வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த ஜனார்த்தனன் அவர்களுக்கு மதுரை மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் மதுரை அண்ணா நகர் ஹர்ஷா கல்யாண மஹாலில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் அவர்களுக்கு பணி நிறைவு பெற்றதை ஒட்டி சால்வை அணிவித்து பாராட்டப்பட்டார்.
கூட்டமைப்பின் தலைவர் கே.முனியசாமி தலைமை தாங்கினார். செயலாளர் ஜி.முனியாண்டி, சி.முருகன், இணைச் செயலாளர் எம்.ரெங்கராஜன் பொருளாளர் பி.ஜெயபால் ஆகியோர் பாராட்டினர், இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜா ராஜேஸ்வரன் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
மாநகராட்சி ஓட்டுநர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வருவாய் உதவியாளர் பணியிடங்களை அனைத்து மாநகராட்சிகளிலும் நிரந்தரமாக ஏற்படுத்தி தர வேண்டும், தொழிற்கல்வி ஆசிரியர்கள் பதவி மாறுதல் மூலம் சென்றவர்களுக்கு தேர்வுநிலை தர ஊதிய தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மாநில கணக்காயர் உடனடியாக விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் நிர்வாகிகள் எம் பாலகிருஷ்ணன் ஜெயசங்கர் ஆகியோர் நன்றி கூறினர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment