குடியாத்தம் அடுத்த ஆர் எஸ் முல்லை நகர் பகுதி சேர்ந்தவர் சுந்தர். இவரது மகன் முத்து (24) கூலி வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியைச் 10 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை மாலை சிறுமி அவரது வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த முத்து சிறுமியின் வாயை பொத்தி தூக்கி சென்று உள்ளார். இதைப்பார்த்த சிறுமியின் அண்ணன் வீட்டிற்கு சென்று தாயிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அந்த சிறுமி முத்துவின் கையை கடித்துவிட்டு அங்கிருந்து வீட்டுக்கு ஓடி வந்து நடந்த சம்பவங்களை குறித்து தாயிடம் தெரிவித்துள்ளார் இதை அடுத்து அவரது தாய் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் முத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment