குடியாத்தம் ஜூலை 10
வேலூர் மாவட்டம்
குடியாத்தம் மேற்கு உள் வட்டம் முங்கப்பட்டு குருப் கிராமத்தில் 2024 ஆண்டு தட்டப்பாறை அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்த செல்வி மைதிலி தந்தை பெயர் செல்வராஜ் (வயது 16) என்பவருக்கும் தட்டப்பாறை கிராமத்தை சேர்ந்த வெள்ளேரி பகுதியில் வசிக்கும் மதன் தந்தை பெயர் சபாபதி (வயது 28) என்பவருக்கும் இன்று குடியாத்தம் சேங்குன்றம் தீர்த்தமலை முருகர் கோவிலில் இன்று 10.07.2024 காலை திருமணம் நடைபெற்றுள்ளது.
மேற்படி தகவல் வரப்பெற்றதை தொடர்ந்து குடியாத்தம் காவல் துறை மற்றும் வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல வழக்கு பதிவு அலுவலர் ஆகியோர் விசாரணை செய்து குடியாத்தம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment