குடியாத்தம் ஜூலை 12
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் இன்று காலை குடியாத்தம் சட்டமன்ற தொகுதி உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கஞ்சா போதை இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம் போதை இல்லாத குடியாத்தம் நகரத்தை உருவாக்குவோம் கண் மொழி பவுண்டேஷன் குடி மற்றும் போதை மறுவாழ்வு மையம் தமிழ்நாடு மது போதை மறுவாழ்வு மையங்கள் சங்கத்தின் இணைந்து நடத்தும் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி வி.அமலு விஜயன் அவர்கள் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர்ராஜன்
கே எம் ஜி நிறுவன தலைவர் கே எம் ஜி ராஜேந்திரன் வழக்கறிஞர் கே எம் பூபதி நகர மன்ற உறுப்பினர் எம் எஸ் குகன் மாணவர்கள் காவல் படை ஒருங்கிணைப்பாளர் கேசவன்
மற்றும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment