காட்பாடி ஜுலை 14
வேலூர் மாவட்டம் காட்பாடியில்
நீட் தேர்வை ரத்து செய்யக் கூடிய வகையில் சென்னை முதல் சேலம் வரை செல்லும் தி.க இருசக்கர வாகன பேரணி காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் வந்தடைந்தது.
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி திராவிட மாணவர் கழகம் சார்பி தமிழகம் தழுவிய சென்னை முதல் சேலம் வரை செல்லும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையமவந்தடைந்தது .
அங்கு திராவிடர் கழக துணைப்பொதுச் செயலாளர் என். ஆர். எஸ். பிரின்சு பெரியார் நீட் தேர்வுக்கு எதிரான கண்டன உரையாற்றினார் முன்னதாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்
No comments:
Post a Comment