வேலூர் : 02.
வேலூர் மாவட்டம் பாலஸ்தீனம் காஸா போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் பார்த்து (அறுவை சிகிச்சை செய்து) பல உயிர்களை காப்பாற்றிய
ஐக்கிய அரபு அமீரகம் UAE துபாய் அரசு மருத்துவமனை சிறப்பு மருத்துவர் வேலூர் மண்ணின் மைந்தன் Dr. முஹம்மத் தாஹிர் MBBS., DNB (ORTHO)
அவர்களை சந்தித்து நண்பர்கள் டிரஸ்ட்டின் நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர் .
மேலும் மருத்துவர் பாலஸ்தீனம் காஸாவில் அப்பாவி மக்கள் படும் துன்பங்களையும், அவர்களின் ஈமானிய உறுதியையும் விவரித்த போது கண்கள் கலங்கியது.
மேலும் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவப் பணியாற்ற விருப்பம் தெரிவித்ததன் பேரில் UAE அரசு அவரை காஸாவில் இயங்கிவரும் UAE அரசின் மருத்துவ முகாமிற்கு அனுப்பிவைத்தது. ஒரு மாதகாலம் மருத்துப்பணி புரிந்தார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment