வேலூர் மாவட்டம் குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் உள்ள பொதுமக்கள் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார்கள், கடன் தவணைத் தொகையை கேட்டு நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டுவதாகவும் அவதூறாக பேசுவதாகவும் நடவடிக்கை எடுக்க கோரி இன்று காலை சித்தூர் கேட் பலமனேர் சாலையில் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்தவுடன் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி துணை காவல் கண்காணிப்பாளர் இருதயராஜ் வட்டாட்சியர் சித்ராதேவி நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி வருவாய் ஆய்வாளர் பலராம பாஸ்கர் கிராம நிர்வாக அலுவலர்கள் சபரிமலை (நகரம்) சிவூா் கிராம நிர்வாக அலுவலர் ரகு ஆகியோர் சாலை மறியல் ஈடுபட்டவர் இடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதில் வங்கியின் முதன்மை மேலாளர் இடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்போம் என்று கூறியதை தொடர்ந்து அனைவரும் கலந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரமாக பரபரப்பு காணப்பட்டது.
No comments:
Post a Comment