குடியாத்தம் ஜூலை 3
வேலூர் மாவட்டம் குடியாத்தம்கவுண்டன்யா ஆற்றுப்பகுதியில்கடந்த 70 ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வசித்து வந்த பொதுமக்களை உச்சநீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் பச்சியம்மன் கோவில் பகுதியில் இருந்த வீடுகளை அப்புறப்படுத்தினார்கள்
அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை முன்னாள் நகர மன்ற தலைவர் மாயா பாஸ்கர் தலைமையில் நகர மன்ற உறுப்பினர் லாவண்யா குமரன் முன்னிலையில் இன்று வட்டாட்சியர் சித்ராதேவி அவர்களிடம் இலவச வீட்டு மனை வழங்க கோரி 100க்கும்மேற்பட்டவர்கள் மனு அளித்தனர் மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் விரைவில் வீட்டுமனை வழங்க ஆவண செய்வதாக கூறினார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment