குடியாத்தம் ஜூலை 8
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் இன்று காலை தனியார் நிதி நிறுவனம் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் கலந்துகொண்டு கடன் பெற்றவரிடம் கடனை வசூலிக்கும் விதத்தை குறித்தும் கடன்தொகையை வசூலிக்க மாலை 6 மணிக்கு மேல் கடன் பெற்றவர் வீட்டிற்கு சென்று தவனை தொகையை கேட்டு அச்சுறுத்தல் செய்யக்கூடாது என்றும்
கடனை முறையாக செலுத்தாதவர்களிடம் நீதிமன்றத்தில் மூலம் கடனை வசூலித்துக் கொள்ளவும் என்று அறிவுரை கூறினார்
இந்நிகழ்ச்சியில் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி உதவி ஆய்வாளர்கள் மற்றும் 15க்கு மேற்பட்ட நிதி நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment