இந்து முன்னணியின் சார்பாக அறநிலையத் துறையை கண்டித்து மாநில தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 21 July 2024

இந்து முன்னணியின் சார்பாக அறநிலையத் துறையை கண்டித்து மாநில தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்

குடியாத்தம் ஜலை 21

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் இன்று காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் டி கே தரணி தலைமை தாங்கினார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்
ஜி கே ரவி எம் ஆறுமுகம் எஸ் அனீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி யுவ சங்கர் வரவேற்புரை ஆற்றினார்
வேலூர் கோட்டத் தலைவர் கோ மகேஷ் கண்டன உரையாற்றினார்
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்லாயிரம் கோவில்கள் இடிந்த நிலையில் உள்ளது.

பல்லாயிரம் கோயில்களில் விளக்குகள் இல்லை வழிபாடு இல்லை தரிசன கட்டணம் அர்ச்சனை கட்டணம் நேர்த்திக்கடன் கட்டணம் விளக்கு பூஜை கட்டணம் மொட்டை அடிக்க கட்டணம் காது குத்த கட்டணம் என பல பெயர்களில் கோயில்களில் கட்டண கொள்ளை இந்து கோவில்கள் திருவிழாவிற்கு கூடுதல் கட்டணத்துடன் அரசு பேருந்துகள் விடப்படுகின்றன ஆனால் முஸ்லிம்கள்  ஹஜ் யாத்திரை செல்ல ஒரு நபருக்கு 12 000  ரூ லிருந்து மானியத்தை உயர்த்தி தமிழக அரசு வழங்குகிறது

இது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்
இறுதியில் ஒன்றிய தலைவர் ஆர் ரமேஷ் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி குடியாத்தம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் திருமண   மண்டபத்தில் தங்க வைத்தனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad