தனியார் வேலை வாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 20 July 2024

தனியார் வேலை வாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!

வேலூர், ஜூலை 21-

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் டிகேஎம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தொடங்கி வைத்தார் .

தனியார் நிறுவனத்திற்கு தேர்வான வேலை நாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன்,  குடியாத்தம் அமுலு விஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மண்டலக் குழுத்தலைவர் கே.யூசுப்கான், வேலைவாய்ப்புத் துறை உதவி இயக்குநர் காந்தி, அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad