குடியாத்தம் ஜூலை 14
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் பெருந்தலைவர்
காமராஜர் அவர்களின் 122 வது பிறந்தநாள் முன்னிட்டு காளியம்மன் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மகிழ் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் பென்சில் பேனா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு உதவி தலைமை ஆசிரியர் திரு பன்னீர்செல்வம் அவர்கள் தலைமை தாங்கினார் மகிழ் அறக்கட்டளை தலைவர் பொன்னரசன் வரவேற்புரையாற்றினார். அறக்கட்டளை உறுப்பினர்கள் குருமூர்த்தி யுவன் சங்கர் திருநாவுக்கரசு புகழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் வேலூர் மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் துணைத் தலைவர் அண்ணாமலை வார்டு உறுப்பினர் சிவகவி முனியப்பன் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் நெடுஞ்செழியன் ஜெயவேலு கார்த்தி ஆகியோர் 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம் பென்சில் பேனா மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் திருமதி கீதா முருகேசன் சுதாகர் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுபாஷினி மற்றும் ஊர் பெரியவர்கள் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் அறக்கட்டளை உறுப்பினர் மோகன் அவர்கள் நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment