தமிழ்நாடு அறிவியல் இயக்கம் டி கே எம் கல்லூரி கிளை துவக்கம் மற்றும் அறிவியல் நூல் அறிமுக விழா - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 19 July 2024

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் டி கே எம் கல்லூரி கிளை துவக்கம் மற்றும் அறிவியல் நூல் அறிமுக விழா

வேலூர் ஜுலை 19

வேலூர் மாவட்டம் 
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட நிர்வாக குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் டிகேஎம் மகளிர் தன்னாட்சி கல்லூரியில் இன்று புதிய கிளை துவக்க விழாவும் புதிய அறிவியல் நூல் அறிமுக விழாவும் 19.07.2024 காலை 11.00 மணியளவில் கல்லூரியின் கூட்ட அரங்கில் நடைபெற்றது. 
 
இந்த விழாவுக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆர்.பானுமதி தலைமை தாங்கினார். கல்லூரியின் தலைவர் டி.சிவக்குமார் செயலாளர் டி.மணிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கல்லூரியின் விலங்கியல் துறை தலைவர் பேராசிரியை முனைவர் தே.சசிகலா வரவேற்று பேசினார். 

வேலூர் மாவட்ட தலைவர் முனைவர் பே.அமுதா, புதிய கிளையினை துவக்கி வைத்து பேசினார்.  மாவட்ட செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் அறிவியல் வெளியீட்டின் வானவியல் என்ற புதிய நூலை அறிமுகம் செய்து வைத்து பேசினார். 

மாவட்ட பொருளாளர் வி.குமரன் வேலூர் கிளையின் தலைவர் பேராசிரியர் கே.தேவி, செயலாளர் முத்து சிலுப்பன், பொருளாளர் ப.சேகர் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் சா.குமரன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மாவட்ட துணைத்தலைவர் கே.விசுவநாதன் அறிவியல் நிகழ்வினை செயல்முறை விளக்கத்தினை நிகழ்த்தினார்.
அறிவியல் இயக்கத்தின் கல்லூரி கிளையின் புதிய நிர்வாகிகளாக மாணவ தலைவராக ஆர் கீர்த்திகா, செயலாளராக டி.அர்ச்சனாதேவி, பொருளாளராக ஓ.சுஷ்மிதா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
பேராசிரியர்கள் வி.கிருத்திகா, பேரா. ரேகா, பேரா.ஏ.வினோதினி, ஜி.வித்யா எஸ்.விஜயகுமாரி அறிவியல் இயக்க ஆர்வலர் சுகுமாரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முடிவில் மாணவியர் குழு செயலாளர் டி.அர்ச்சனாதேவி, நன்றி கூறினார்.


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 


No comments:

Post a Comment

Post Top Ad