புதிய செல்போன் டவர் அமைப்பதை எதிர்த்து விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் போராட்டம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 31 July 2024

புதிய செல்போன் டவர் அமைப்பதை எதிர்த்து விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் போராட்டம்!

வேலூர் ஜுலை 31

வேலூர் மாவட்டம் அருகே புதியதாக செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் போர்க்கொடி பள்ளி அங்கன்வாடி மையம் அருகே இருப்பதால் குழந்தைகளுக்கு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும் என போராட்டம் நடத்தப்பட்டது.

வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த இடையன் சாத்து வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60-வது வார்டு பகுதியில் தனியார் பள்ளி அரசு அங்கன்வாடி மையம் உள்ளிட்டப் பகுதியில் அருகாமையில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணி  முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

 இதற்கு முன்பு அந்த பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்து நிறுத்தி வைத்திருந்த பணியை திடீரென கட்டுமான பணியை மேற்கொள்ள தனியார் நிறுவனம் செயல்பட்டு வருவதாக அந்த பகுதி சேர்ந்த மக்கள் புகார் கூறிவந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 60-வது வார்டு செயலாளர்  ஜோதிஷ் பிரவீன் குமார் அவரின் தலைமையில் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் ஏராளமான ஒன்று திரண்டு செல்போன் டவரை அமைப்பதை எதிர்த்து கோஷங்களை எழுப்பப்பட்டது. பணியை நிறுத்திவிட்டு செல்போன் டவர் அமைப்பவர்கள் அங்கிருந்து சென்று விட்டார்கள் இந்தப் பகுதியில் குழந்தைகள் படிக்கும் அங்கன்வாடி மையம் தனியார் பள்ளி அமைந்திருப்பதால் குழந்தைகளுக்கு கதிர்வீச்சு அபாயம் ஏற்படும் என்பதால் இந்த இடத்தில் தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்க கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கை வைத்தனர். 


வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad