வேலூர் ஜுலை 31
வேலூர் மாவட்டம் அடுத்த வேலப்பாடி விநாயக முதலியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், வேலப்பாடி விநாயக முதலியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 150 க்கும் மேற்பட்ட பதினோராம் வகுப்பு மாணவிகளுக்கு, தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச மிதிவண்டியை வேலூர் மாநகராட்சி 45வது வார்டு மாமன்ற உறுப்பினர் அஸ்மிதா கோபிநாதன் வழங்கினார். இந்நிகழ்வின் போது தலைமை ஆசிரியர் சித்ரா, உதவி தலைமை ஆசிரியர் சிவக்குமார், சங்கீதா, லட்சுமிகாந்தன், ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் அரசு துறை சார்ந்த பணியாளர்கள் உட்பட பலர் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment