டிட்டோஜாக் ஆசிரியர் கூட்டமைப்பின் போராட்டம் அடக்குமுறைகளும் காவல்துறை கைதும் தொடருமானால் போராட்டங்கள் தீவிரமாகும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு முதலமைச்சருக்கு கோரிக்கை! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 30 July 2024

டிட்டோஜாக் ஆசிரியர் கூட்டமைப்பின் போராட்டம் அடக்குமுறைகளும் காவல்துறை கைதும் தொடருமானால் போராட்டங்கள் தீவிரமாகும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு முதலமைச்சருக்கு கோரிக்கை!

வேலூர் ஜுலை 30

வேலூர் மாவட்டம் டிட்டோஜாக்  ஆசிரியர் கூட்டமைப்பின் போராட்டம் அடக்குமுறைகளும் காவல்துறை கைதும் தொடருமானால் போராட்டங்கள் தீவிரமாகும்
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்தனர்.
நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தமிழகத்தின், டிட்டோஜாக் கூட்டமைப்பின் ஆசிரியர்களை கைது செய்து சிறையில் அடைப்பது;  அடக்கு முறைகளை ஏவிவிட்டு அவர்களின் நியாயமான போராட்டங்களை நசுக்க; ஒடுக்க முற்படுவது  போராட்டங்களை தீவிரப்படுத்தும் எனவே  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமென இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பிலும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் சார்பிலும் கேட்டுக்கொள்கின்றோம்.

இது குறித்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினரும் தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவருமான செ.நா.ஜனார்த்தனன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. 
  நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தமிழகத்தின் டிட்டோஜாக் கூட்டமைப்பின் ஆசிரியர்களை கைது செய்து சிறையில் அடைப்பது;  அடக்கு முறைகளை ஏவிவிட்டு அவர்களின் நியாயமான போராட்டங்களை நசுக்க; ஒடுக்க முற்படுவது  போராட்டங்களை தீவிரப்படுத்தும் எனவே  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமென கோருகின்றோம்.

உரிமைகளுக்காக வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடும் லட்சக்கணக்கான ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை உரிய முறையில் பேச்சுவார்த்தை செய்து, தீர்க்க வேண்டிய நியாயமான கோரிக்கைகளை தீர்வு காண்பதை விடுத்து கைது செய்து அடக்கி விடலாம் என்பது மேலும் மேலும் தமிழ்நாட்டில் பல்வேறு கோரிக்கைகளுக்காக உறுதிமொழி அளித்துவிட்டு ஏமாற்றம் அளித்து இருக்கும் தமிழக அரசுக்கு எதிராக ஒட்டுமொத்த ஆசிரியர் அரசு ஊழியர் அமைப்புக்களும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு வந்து விடும் என்பதை தமிழக அரசுக்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில அமைப்பின் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம். 

 தமிழக அரசும் பள்ளிக்கல்வித்துறையும் உடனடியாக கைது செய்தவர்களை விடுவித்து போராடும் அமைப்பின் சங்க நிர்வாகிகளை  அழைத்து ஜனநாயக முறையில் பேச்சுவார்த்தை செய்து ஆசிரியர்களின் நியாயமான உரிமைகளை வழங்குவதற்கு தீர்வு காண கேட்டுக்கொள்கின்றோம்.


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 


             

No comments:

Post a Comment

Post Top Ad