காட்பாடி ஜுலை 25
வேலூர் மாவட்டம் காட்பாடி இளங்கோ வீதி பகுதியில் பாலைவனப் பகுதிகள், இமயமலைக்கு வடக்கேயும் உள்ள ஆசியா பகுதி, இந்தோனேசிய தீவுகள் மற்றும் பசிபிக் தீவுகள் வசிக்கும் அரியவகை ஆந்த இனங்களில் ஒன்றான களஞ்சிய ஆந்தையானது இறக்கை உடைந்த நிலையில் தவித்து வந்தது.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அருகில் உள்ள காட்பாடி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர் உடனடியாக காட்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் முருகேசன், கோபால் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் சம்பவதீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறக்கை உடைந்த நிலையில் இருந்த களஞ்சிய ஆந்தையை உடனடியாக மீட்டு சிகிச்சைக்கு எடுத்துச் சென்றனர்
இந்த களஞ்சிய ஆந்தை அரிய வகை ஆந்தை என்பதால் அப்பகுதியில் சிறுவர்கள் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்
No comments:
Post a Comment