வேலூரில் அரசுப்பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வானவில் மன்ற கருத்தாளர்கள் தேர்வு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 25 July 2024

வேலூரில் அரசுப்பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வானவில் மன்ற கருத்தாளர்கள் தேர்வு!

வேலூர் ஜுலை 25

வேலூர் மாவட்டம் 
அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக, புதியவற்றை அறிந்துகொள்ளும் எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்கவும் 'வானவில் மன்றம்' திட்டம் 2023-24ஆம் கல்வியாண்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டகளுக்கன வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு நேர்காணல் வேலூர் அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் எஸ்.மகாலிங்கம் தொடக்கஉரையாற்றினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட தலைவர் பே.அமுதா செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேனாள் மாநில பொதுச்செயலாளர் எஸ்.சுப்பிரமணி, வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சா.குமரன், கே.விசுவநாதன்,  திருவண்ணாமலை சிவக்குமார், இராணிப்பேட்டை நரசிம்மன், உணா, திருப்பத்தூர் நிக்சன் ராஜ் ஆகியோர் நேர்காணல் நடத்தினர்.
அரசு முஸ்லீம் பள்ளி தலைமையாசிரியர் கா.பாஸ்கரன், வேலூர் கிளை தலைவர் பேராசிரியர் கே.தேவி, செயலாளர் முத்து சிலுப்பன், பொருளாளர் பா.சேகர் மாவட்ட இணை செயலாளர் எ.பாஸ்கர் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மேலும் இந்நிகழ்ச்சியின் போது மாநில வழிகாட்டுதலின் படி 3அறிவியல் நூல்கள் அறிவியல் தேசம், அதிசய மோதிரம் மற்றும் அறிவியல் பார்வையில் நல்ல நேரம், நல்ல காலம்  ஆகிய மூன்று புத்தகங்கள்  பள்ளி தலைமையாசிரியர் கா.பாஸ்கரன் வெளியிட மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், வேலூர் கிளை தலைவர் கே.தேவி, மு.சிலுப்பன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 
இத் திட்டம் குறித்து மாநில கருத்தாளர் எஸ்.சுப்பிரமணி கூறியதாவது….  இத்திட்டத்திற்காக தமிழ்நாடு முழுவதும் 710 ஸ்டெம் கருத்தாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் நடமாடும் அறிவியல் மற்றும் கணித பரிசோதனை ஏதுவாளர்களாக செயல்படுவார்கள்.  மேலும், அவர்கள் 6 முதல் 8 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு எளிய அறிவியல் பரிசோதனைகளுக்கான (Experiments) கருவிகளை உடன் எடுத்து வருவார்கள்.  அரசுப் பள்ளிகள் தோறும் வரும் கருத்தாளர்கள் பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து, ஆசிரியர்கள் துணையோடு மாணவர்களுக்கு பரிசோதனைகளை செய்து காண்பிப்பார்கள்.  அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கணிதக் கருத்துக்கள் குறித்த சிந்திக்கும் திறமையுடன் கூடிய எல்லையற்ற ஆர்வத்தை வளர்தெடுப்படுதற்கான சூழலை உருவாக்குவதை நோக்கமாக கொண்டதே STEM ( Science Technology Engineering and Mathematics ) திட்டம். வானவில் மன்றம் என்பது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் இணைந்த செயல் திட்டமாகும்.  திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கான கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார்.


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad