ஆதரவற்ற பெண்மணி சடலம் அடக்கம் செய்த சமூக ஆர்வலர் காவலர்கள் சார்பில் உரிய சான்றிதழ் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 4 July 2024

ஆதரவற்ற பெண்மணி சடலம் அடக்கம் செய்த சமூக ஆர்வலர் காவலர்கள் சார்பில் உரிய சான்றிதழ்

குடியாத்தம் ஜூன் 4

வேலூர் மாவட்டம் கருகம்புதூர் பகுதியில் (சுமார் 50)  வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் உடல்நலம் குன்றிய நிலையில் அந்த கிராமத்தில் சுற்றித்திரிந்து வந்தார்.   (14.6.24 ) அப்பகுதியில் உள்ள பள்ளி அருகில் உடல்நல குறைவால் இறந்த நிலையில் கிடந்தார். 
 அக்கம் பக்கம் விசாரித்து நிலையில் யார் என்று தெரியவில்லை

 இந்நிலையில் அவரது உடல் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் சவ கிடங்கில் வைக்கப்பட்டது. விளம்பரம் கொடுக்கப்பட்டும் யாரும் தேடி வரவில்லை.

இதையடுத்து, விரிஞ்சிபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெகதீசன் அவர்களின் வேண்டுகோளின் பேரில்    இறந்தவரின் உடலை  சமூக சேவகர் எம்.கோபிநாத்   வேலூர் மாநகராட்சி வழிகாட்டுதலின்படி   உரிய மரியாதையுடன்  இறுதிச்சடங்குகள் செய்தார். பின்னர் அவர் தனது சொந்த செலவில் வேலூர் பாலாறு  இடுகாட்டில்  நல்லடக்கம்  செய்தார்.

 சடலம் நல்லடக்கம் செய்ய விரிஞ்சிபுரம் காவல் நிலைய முதல் நிலை  காவலர் அன்பரசு அவர்கள் கோபிநாத்துக்கு உரிய சான்றுகளை வழஙகபட்டது.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 



No comments:

Post a Comment

Post Top Ad