குடியாத்தம் ஜூலை 7
வேலூர் மாவட்டம்குடியாத்தம் செரு வங்கியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து வீரவணக்கம் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கோடீஸ்வரன் தலைமை தாங்கினார்.
கோபி சுரேஷ் நேரு மணவாளன் கணேசன் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர்கள் பன்னீர் செல்வம் சங்கர் வடிவேல் மற்றும் பாஸ்கர் தனஞ்செழியன் வெங்கடேசன் மணிகண்டன் தாஸ் ஜெய் மது மேலும் இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் இராசி .தலித் குமார் குத்து விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தினார். முடிவில் குற்றவாளிகளை கைது செய்து அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் காவல்துறை மெத்தனப் போக்கோடு செயல்படுவதையும் தமிழக முதல்வர் அரசியல் படுகொலையை தடுக்காததை கண்டித்தும் கண்டன முழக்கம் செய்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment