குடியாத்தம் ஜூலை 15
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் இன்று காலை 100 நாள் தொழிலாளிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி மூங்கப்பட்டு ஊராட்சி காத்தாடி குப்பம் சமுதாயக்கூடம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி காந்திநகர் சமுதாயக் கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விட கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பேர்ணாம்பட்டு தாலுகா செயலாளர் சி சரவணன்
குடியாத்தம் தாலுகா செயலாளர் எஸ் சிலம்பரசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே சாமிநாதன்
செ ஏகலைவன் கே ஜே சீனிவாசன் பி காத்தவராயன் குணசேகரன் குபேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்
இதில் 50க்கும் மேற்பட்ட 100 நாள் பணியாளர்கள் பங்கேற்றனர்
இறுதியாக தலித் பாஸ்கர் நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment