குடியாத்தம் ஜூலை 15
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 9 மணி அளவில் காமராஜரின் 122 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் நோட்டுபுத்தகங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது குடியாத்தம் லயன் சங்கத்தின் சார்பில் பாராட்டு சான்றிதழ் உள்ளிட்டவற்றை முன்னாள் மானவர் சங்க தலைவர் சடகோபன் பெற்றோர்ஆசிரியர்கழக தலைவர் ஜுஎஸ்.அரசு கல்விக்குழுதலைவர் எம்கே. பொன்னம்பலம் குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கத்தின் தலைவர் ஜெ. பாபு ஆகியோர் வழங்கினார்கள் நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கீதா உதவி தலைமைஆசிரியர் அருள் பிரகாசம் ஆசிரியர்கள் சொக்கலிங்கம் பாபு புனிதவதிஆசிரியர்கள் லயன்ஸ் கிளப் பொருளாளர் எஸ்வி. சுரேஷ்குமார் உறுப்பினர் கே. ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதியம் 12 மணியளவில் காமராஜர் புகழை போற்றுவகையில் பள்ளியில் பயிலும் 600 மாணவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது அதேபோல் மாலை 3மணி அளவில் நெல்லூர் பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கல்வியில் சிறந்து விளங்கிய மாணவிகளுக்கு லயன்ஸ் கிளப் சார்பில் பாராட்டு சான்றிதழ் குடியாத்தம் எச்பி டீலர் சொர்ணம் வர்த்தக நிறுவனத்தின் சார்பில் பரிசு மற்றும் ஊக்க தொகை நிறுவனத்தின் மேலாளர் சுஜாதா பொன்னம்பலம் வழங்கினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment