இந்திய மருத்துவ சங்கம் குடியாத்தம் கிளை சார்பாக உயிர் காக்கும் பயிற்சி! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 6 July 2024

இந்திய மருத்துவ சங்கம் குடியாத்தம் கிளை சார்பாக உயிர் காக்கும் பயிற்சி!

குடியாத்தம் ஜூலை 6

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு  தலைமை  மருத்துவமனையில் இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள்
6-5-2024 சனிக்கிழமை 10:30 மணி அளவில் காணொளி காட்சி மூலம் தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

இது சம்மந்தமாக குடியாத்தம் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் குடியாத்தம் அரசு தலமை மருத்துவமனையில் உயிர்காக்கும் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது
இந்நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவமனை மருத்துவர் மாறன் பாபு தலைமை தாங்கினார்.
உயிர் காக்கும் பயிற்சி பற்றி மருத்துவர் ஆடலரசு அவர்கள் பொதுமக்களுக்கு பயிற்சி முகாமை பற்றி விழிப்புணர்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன
குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன்
நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி
தீயணைப்பு துறை அலுவலர் மகேஷ்
I M A சங்க நிர்வாகிள் டாக்டர் எம் எஸ் சிதம்பரம் டாக்டர் எம் சுதாகர் டாக்டர் ஜே வி ஈஸ்வரன் எம் எஸ் திருநாவுக்கரசு டாக்டர் எஸ் சுகுமார் மற்றும் டாக்டர் அசோகன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் விபத்து ஏற்பட்ட நபருக்கு எப்படி முதல் உதவி செய்ய வேண்டும் என்பதை பற்றி டாக்டர் ஆடலரசு செய்முறை பற்றி விளக்கினார்.
இந்நிகழ்ச்சியில் தீயணைப்புத் துறையினர் அரசு  மருத்துவர்கள் செவிலியர்கள் தீயணைப்பு துறையினர் ஆட்டோ ஓட்டுனர்கள் த னியார்செவிலியர் பயிற்சி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad