குடியாத்தம் ஜூலை 6
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சப் டிவிஷனுக்கு உட்பட்ட
குடியாத்தம் நகரம் கிராமிய காவல் நிலையம் மகளிர் காவல் நிலையம்
மற்றும் கே வி குப்பம் பரதராமி பேரணாம்பட்டு மேல்பட்டி பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு காணும் வகையில் இன்று தனியாா் திருமண மண்டபத்தில் முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு குடியாத்தம் காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி வரவேற்றார்இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கோடீஸ்வரன் கலந்து கொண்டு நிலுவையில் இருந்த புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து இரு தரப்பினரை அழைத்து விசாரணை மேற்கொண்டார் அதன் மூலம் தீர்வு கிடைக்கப்பெற்றது
இதில் கிராமிய காவல் ஆய்வாளர் சாந்தி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அல்லிராணி
குடியாத்தம் நகர உதவி ஆய்வாளர் பத்மநாபன் கிராமிய காவல் உதவி ஆய்வாளர் எழில் வேந்தன்
பரதராமி உதவி ஆய்வாளர்கள் ராமானுஜம் மேகராஜ் கே வி குப்பம் உதவி ஆய்வாளர்கள் கார்த்திக் சரவணன் பேர்ணாம்பட்டு உதவி ஆய்வாளர் சிலம்பரசன்ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் நிலுவையில் இருந்த சுமாா் 183 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment