இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல் ஒருவர் படுகாயம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 7 July 2024

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல் ஒருவர் படுகாயம்!

குடியாத்தம் ஜூலை 7

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மேற்கு உள்வட்டம் 41. தாழையாத்தம் கிராமம் மேல் ஆலத்தூர் ரோடு பாபு ஏஜென்சி அருகில் இன்று(6.7.2024) மாலை சுமார் 7.30 மணி அளவில்இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் சிவானந்தம் த/பெ சுப்பிரமணி (வயது 46) என்ற நபருக்கு மட்டும் தலையில்  காயம் ஏற்பட்டுள்ளது. வண்டி எண்TN23CQ6340. மற்றொரு வண்டியில் வந்த நபர் தப்பிச் சென்று விட்டார் என விசாரணையில் தெரிய வருகிறது .

மேற்படி நபரை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று உள்ளனர். மேற்படி நபர் குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை சக்தி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர்  அகரம் சேரி மது கடையில் பணி செய்பவர் என்றும் இவருக்கு கோடீஸ்வரி( 40) என்ற மனைவியும், இரண்டு மகள்கள் வயது (12, 15) உள்ளனர் என தெரிய வருகிறது .

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad