இந்தியன் ரெட்கிராஸ் சார்பில் தேசிய மருத்துவர்கள் தினம் – சப் கலெக்டர் ஆர்.கே.கவிதா மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டு - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 15 July 2024

இந்தியன் ரெட்கிராஸ் சார்பில் தேசிய மருத்துவர்கள் தினம் – சப் கலெக்டர் ஆர்.கே.கவிதா மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டு

காட்பாடி ஜுலை 15

     வேலூர் மாவட்டம் காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் தேசிய மருத்துவர்கள் தினம் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜுலை மாதம் வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும்  மேற்குவங்க மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சருமான  மருத்துவர் பிதான்சந்திரராய் அவர்களின் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. 

அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டம் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் சார்பில் தேசிய மருத்துவர் தினம் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 15.07.2024 நடைபெற்றது. 

நிகழ்வுக்கு காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர்செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். 
அவை துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன் வரவேற்று பேசினார்.  மருத்துவ குழு தலைவர் டாக்டர் வீ.தீனபந்து,கே.ராஜேஸ்குமார்
ஜெயின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மருத்துவர்களின் சேவைகளை பாராட்டி சங்கத்தின் தலைவரும் வேலூர் வருவாய் கோட்டாட்சியருமான ஆர்.கே.கவிதா அவர்கள் சிறந்த மருத்துவர்களுக்கான விருதுகளை கே.வி.குப்பம் வட்டார மருத்துவ அலுவலர் எம்.சங்கர்கணேஷ், தாராபடவேடு அரசு நகர்புற சுகாதார மையத்தின் மருத்துவ அலுவலர் சி.லட்சுமி, பள்ளிக்குப்பம் அரசு நகர்புற சுகாதார மையத்தின் மருத்துவ அலுவலர் மார்க்ஸ் காஸ்ட்ரோ, வேலூர் அரசு பென்லேன்ட் மருத்துவமனையின் மகளிர் நல மருத்துவர் எ.ஷாலினிரூபா, மகளிர் நல மருத்துவர் டி.ஸ்ருதி தாமோரன் ஆகிய ஐந்து பேருக்கு விருதுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

சமூகம் மற்றும் தனி மனிதருக்கு மருத்துவர்கள் செய்யும் சேவையை அங்கீரிக்க உருவாக்கப்பட்டதே தேசிய மருத்துவர்கள் தினம். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சூலை மாதம் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.  
1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. கொரனா நோய் தாக்கப்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்களது உயிரினை துச்சமாக மதித்து சிறப்பாக சேவையினை இந்த மனித சமூகத்திற்கு செய்து வரும் மருத்துவர்களின் சேவையினை மனதார பாராட்டுகின்றோம் என்றர்.
மேலாண்மைக்குழு உறுப்பினர் எ.ஶ்ரீதரன் ஜெயின், பி.என்.ராமச்சந்திரன், கே.ருக்ஜி ராஜேஷ்குமார் ஜெயின் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர்கள் தாமேதரன், டி.என்.ஷோபா ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர்.
செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு நன்றி கூறினார்.


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 


No comments:

Post a Comment

Post Top Ad