குடியாத்தம் ஜூலை 10
குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர்
பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் சுண்ணாம்புப்பேட்டை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது, சுண்ணாம்புப்பேட்டை சுடுகாடு அருகே நடந்து வந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் மோதின் பேட்டை பகுதியை சேர்ந்த யூசுப் மகன் குலாப் 50, என தெரிய வந்தது. இதை அடுத்து அவர் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருந்து தெரியவந்தது. அவரிடம் இருந்து இரண்டு கிலோ 300 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து குலாப்பை கைது செய்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment