தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 11 July 2024

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

குடியாத்தம் ஜூலை 10

வேலூர் மாவட்டம் குடியாத்தம் 
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் 
தலைவர்‌கு. செல்வப்பெருந்தகை அவர்களை தொடர்ந்து இழிவாகவும், தரக்குறைவாகவும் விமர்சனம் செய்து வரும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை கண்டித்து வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் இன்று 10.07.2024 புதன்கிழமை மாலை 4 மணி அளவில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டமும் அண்ணாமலையின் கொடும்பாவி எரிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

நிகழ்விற்கு வேலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் NMD.விக்ரம் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ராகேஷ், நவீன் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயன் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்வில் வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் இடையே அண்ணாமலையின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. நிகழ்வில் வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர்  கிருஷ்ணவேணி ஜலந்தர், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் பெரியசாமி, தனசேகர், பேரணாம்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் முஜம்மில் அஹ்மத், மாவட்ட நிர்வாகிகள் விஜயேந்திரன், வாசு, பாரத் நவீன்குமார், சரவணன், உவைஸ் அஹ்மத், மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜய்பாபு, மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர்  கோமதி குமரேசன், மாவட்ட எஸ்ஸி பிரிவு தலைவர் அன்பரசன், மாவட்ட ஊடக பிரிவு தலைவர் யுவராஜ், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் ராஜசேகரன், மாவட்ட கலைப்பிரிவு தலைவர் காத்தவராயன், மாநில எஸ்ஸி பிரிவு செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் குடியாத்தம் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீராங்கன் நன்றியுரை கூறினார்.



குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad