குடியாத்தம் ஜூலை14
வேலூர் மாவட்டம் குடியாத்தம்கார்த்திகேயபுரம் அருகில் உள்ள அத்தி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிறப்பு முகாம் இன்று காலை நடைபெற்றது.
இதில் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் அனிதா ரமேஷ் அவர்கள் கலந்துக்கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். அத்தி மருத்துவமனையின் தலைமை ஆலோசகர் மருத்துவர் ஆ.கென்னடி அவர்கள் தலைமை தாங்கினார்.
மேலும் அத்தி மருத்துவமனையில் சுமார் 50 நோயாளிகளுக்கு புற்றுநோய்க்கான சிகிச்சை மற்றும் ஆலோசனை இயற்கை , ஹோமியோபதி( ஆயுஷ்) மற்றும் ஹோலோபதி கூட்டு சிகிச்சை மூலம் அளிக்கப்பட்டது. குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் k. குமரவேல், நிர்வாக அதிகாரி செந்தில் ஆகியோர் கலந்துகொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment