குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு புற காவல் நிலையத்தில் காவலர் நியமிக்க - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 11 July 2024

குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு புற காவல் நிலையத்தில் காவலர் நியமிக்க

குடியாத்தம் ஜூலை 10

வேலூர் மாவட்டம் குடியாத்தம்
அரசு மருத்துவமனைகமருத்துவமனை தலைமை மருத்துவர் மாறன் பாபு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது, 
குடியாத்தம் தலைமை மருத்துவமனையில் தனியார் அவசர ஊர்தி ஓட்டுநர்கள் அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் அமர்ந்து கொண்டு அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர் இதனால் மருத்துவ பணியாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர் மற்றும் நோயாளிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் மேலும் அவசர உறுதி ஓட்டுநர்கள் அவர்களுக்குள்ளாவே மருத்துவமனை வளாகத்தில் சண்டை போட்டுக்கொண்டு பிரச்சனை செய்வது வாடிக்கையாக உள்ளது.

 எனவே நோயாளிகளின் நலன் கருதியும் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதியும் மருத்துவமனையில் உள்ள புற காவல் நிலையத்தில் காவலர்களின் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad