கே வி குப்பம் ஜூலை 31
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கேவி குப்பம் பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளி வேலை இல்லா ஆசிரியர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் தலைமை தாங்கிய செல்லையா M.Sc,MEd, Mphil தொடக்க உரை வழங்கிய விஜய் M.Sc, MEd, Mphil, PhD கிளை தலைமை ஆசிரியர்கள் K.பொன்னுசாமி M.Sc ,MEd Mphil வினோத் கண்ணன் M.Sc ,M.Ed, Mphil சதீஷ் கண்ணன் M.Sc மு.குபேந்திரன் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தினர்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியில் பல்கலைக்கழகத்தின் மூலம் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேவையில்லை ஆகையால் ஆசிரியர் தகுதி தேர்வினை ரத்து செய்.
வெளி மாநிலத்தில் ஆசிரியர் கல்வியில் பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றுள்ள ஆசிரியர் சான்றிதழ் சரிபார்த்து தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் அனைத்து சான்றிதழ்களும் பதிவிட அனுமதி வேண்டும் மற்றும் ஆசிரியர் பணி வழங்கிட வேண்டும்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மூலம் பதிவு உப்பு அடிப்படையில் தமிழ் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்ற பதிவு பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு அரசு ஆசிரியர் பணி வழங்கிட வேண்டும்
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு நிலை பெற நல்வாரியம் அமைத்திட வேண்டும் .மற்றும் தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்யப்பட்ட ஊதியத்தை வழங்கிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர் .
திமுக அரசே திமுக அரசே வேண்டாம் வேண்டாம் ஆசிரியர் தகுதி தேர்வு வேண்டாம் .
திமுக அரசு திமுக அரசே வேண்டும், வேண்டும் அரசு ஆசிரியர் வேலை வேண்டும் .
வேண்டாம் வேண்டாம் முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞரின் கொள்கைகளை மறந்து விட வேண்டாம்.
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நல்வாரியம் அமைத்திட வேண்டும் என பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது .
நிகழ்ச்சியின் முடிவில் V.பாரத் குமார் B,Sc ,B,Ed. நன்றி உரை கூறினார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment