குடியாத்தம் நகர லயன் சங்கத்தின் சார்பில் ₹1 லட்சம் மதிப்பில் சேவை திட்டங்கள் அளிக்கப்பட்டது - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 26 August 2024

குடியாத்தம் நகர லயன் சங்கத்தின் சார்பில் ₹1 லட்சம் மதிப்பில் சேவை திட்டங்கள் அளிக்கப்பட்டது

குடியாத்தம் நகர லயன் சங்கத்தின் சார்பில் ₹1 லட்சம் மதிப்பில் சேவை திட்டங்கள் அளிக்கப்பட்டது

குடியாத்தம் ஆக 26

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர லயன் சங்கத்தின் சார்பில்  1லட்சம் மதிப்பில் சேவை திட்டங்கள்(25.8.2024)  ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை லயன்ஸ் சங்க கட்டிடத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கத் தலைவர் ஜே.பாபு தலைமை தாங்கினார் எம்எஸ்.நமச்சிவாயன் செயலாளர் அறிக்கை வாசித்தார் ஜே.ஜி நாயுடு எம் கார்த்திகேயன் என்.குமார் உதயகுமார் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாவட்ட ஆளுநர் எஸ் சுரேஷ் அவர்கள் கலந்து கொண்டு நலதிட்ட உதவிகளை தொடங்கி வைத்தார் குடியாத்தத்தில் செயல்படும் முஸ்லிம் தொண்டு அமைப்புக்கு நிரந்தர சேவை திட்டத்தின் சார்பில் ஃப்ரீசர்  பாக்ஸ் ( குளிர்சாதனபெட்டி புவனேஸ்வரி பேட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் லுங்கி வழங்கப்பட்டது
கிருபானந்த வாரியார் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லூர் பேட்டை கருப்புலீஸ்வரர் ஆலயத்தில் பொதுமக்கள் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
சாலையோர வியாபாரிக்கு நிழற்குடை வழங்கப்பட்டது.

வறுமையில் வாடும் ஏழை பெண்மணிக்கு ஒரு மூட்டை அரிசி 
குடியாத்தத்தில் உள்ள சிவனடியார்களுக்கு காவி வேட்டி உடை துண்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு  மரக்கன்றுகள் குடியாத்தத்தில் கொரோனா காலகட்டத்தில் மற்றும் தற்போது வரை மனநிலை பாதிக்கப்பட்ட மற்றும் அனாதை பிணங்களை அடக்கம் செய்தல் ரத்ததானம்  வழங்குதல்  உள்ளிட்ட சிறந்த சேவையாற்றி வரும்30 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது   நிகழ்ச்சியில் மாவட்ட லயன்ஸ் நிர்வாகிகள் அவை செயலாளர் சிவ சக்தி எம். கோபால் அவை பொருளாளர் எச். இளங்கோவன் டான் டு டஸ்க் டிசி சிபி.விஜய் மற்றும் சிவராஜ் எஸ். ரவி  டி.ரங்கராஜன்  கோபால்ரத்தினம் எம்கே.பொன்னம்பலம்  டி.கமலஹாசன் என்.தேவராஜ் ஏ சுரேஷ் குமார் ஆசிரியர் எம்.அருள்பிரகாசம் ஏ வேல்முருகன் டி.பிரவீன் குமார் கோல்டன் பாபு என்எஸ். விவேகானந்தன் கிரிதர் பிரசாத் ஏ.காசிவிஸ்வநாதன் பிஎஸ்.ரவீன்திரன் ஆகியோர்
கலந்துகொண்டுஇறுதியில் லைன்ஸ்ல பொருளாளர் எஸ்வி. சுரேஷ்குமார் நன்றி கூறினார்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad