நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டதால் அச்சமடைந்த பயணிகள் 15 நிமிடத்தில் சரி செய்து மீண்டும் இயக்கம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 28 August 2024

நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டதால் அச்சமடைந்த பயணிகள் 15 நிமிடத்தில் சரி செய்து மீண்டும் இயக்கம்

நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டதால் அச்சமடைந்த பயணிகள்

வேலூர் ஆக28

வேலூர் மாவட்டம் வேலூர் கண்ட்ரோல்மென்ட் அருகே நடுவழியில் ரயில்  நிறுத்தப்பட்டதால் அச்சமடைந்த பயணிகள் உடனடியாக சரி செய்து மீண்டும் இயங்கியது
 
மேற்கு வங்கம் புருலியாவிலிருந்து திருநெல்வேலி செல்லும் வாராந்திர பயணிகள் விரைவு ரயில் காட்பாடி ரயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. வேலூர் கண்டோன்மெண்ட் அருகே ரயிலின் ஏ1 பெட்டியின் சக்கரத்திலிருந்து புகை வந்துள்ளது. அதைத்தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ரயிலில் பயணித்த பயணி ஒருவர் அபாய சங்கலியை இழுத்ததால் பிரேக் (பைண்டிங்) கோளாறு ஏற்பட்டு புகை வந்தது தெரிந்துள்ளது பின்னர் பிரேக் (பைண்டிங் ) கோளாறு சரி செய்யப்பட்டு 15 நிமிடத்திற்கு பிறகு ரயில் புறப்பட்டு சென்றது. நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் சற்று பதட்டம் அடைந்தனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad