காட்பாடி தாலுகாவில் 19 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம் :கோட்டாட்சியர் உத்தரவு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 1 August 2024

காட்பாடி தாலுகாவில் 19 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம் :கோட்டாட்சியர் உத்தரவு!

 வேலூர், ஆக.2-

 வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவில் 19 கிராம நிர்வாக அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து வேலூர் கோட்டாட்சியர் கவிதா உத்தரவிட்டுள்ளார். காட்பாடி தாலுகா, காட்பாடியில் பணிபுரிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் சுகுமார் வள்ளிமலைக்கும், அங்கு பணிபுரிந்து வரும் முரளி செம்பராயநல்லூருக்கும், கழிஞ்சூரில் பணிபுரிந்து வரும் ஆசீர் தங்கராஜ் கீரைசாத்து கிராமத்துக்கும், செம்பராயநல்லூர் கிராமத்தில் பணிபுரிந்து வரும் மேகலா சேனூர் கிராமத்திற்கும், பொன்னை கிராமத்தில் பணிபுரிந்து வரும் முனியப்பன் அரும்பருதி கிராமத்திற்கும், அங்கு பணிபுரிந்து வரும் திலீப்குமார் எருக்கம்பட்டு கிராமத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று வஞ்சூர் கிராமத்தில் பணிபுரிந்து வரும் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் கழிஞ்சூருக்கும், கரசமங்கலம் கிராமத்தில் பணிபுரிந்து வரும் நிவேதா வண்டறந்தாங்கல் கிராமத்திற்கும், தாராபடவேட்டில் பணிபுரிந்து வரும் சுரேஷ் பாபு பொன்னைக்கும், எருக்கம்பட்டு கிராமத்தில் பணிபுரிந்து வரும் பாலாஜி ஏரந்தாங்கல் கிராமத்திற்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இந்த 19 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றத்துக்கான உத்தரவை வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா பிறப்பித்துள்ளார். வண்டறந் தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா  புதூரில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று சேனூரில் பணியாற்றிய அன்பரசன் உண்ணாமலை சமுத்திரத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் மட்டும் காட்பாடி தாலுகாவில் பணியிட மாற்றத்தையும் தங்களுக்கு வேண்டிய இடத்தையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று பிரம்மபுரத்தில் பணிபுரிந்த ரேகா மீண்டும் பிரம்மபுரத்திலேயே பணிபுரிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போன்று கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்திற்கும் இதேபோன்று முக்கிய பங்கு வகிக்காமல் அவர்களை ஓரங்கட்டி விட்டு அவர்கள் கேட்ட இடங்களை தராமல் தங்களுக்கு விருப்பப்பட்ட இடங்களுக்கு அவர்களை இடமாற்றம் செய்து வருவாய்த்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அரசியல் தலையீடு ,குறுக்கீடு இருப்பதாகவும் விஏஓக்கள் மத்தியில் ஒரு பேச்சு அடிபட்டு கொண்டுள்ளது. ஆக மொத்தத்தில் எதற்கெடுத்தாலும் அரசியல் நுழைவதால் இதில் வி ஏ ஓ முன்னேற்ற சங்கமும், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்திற்கு இடையேயும் பணிப்போர் மற்றும் கௌரவப்போர் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad