வேலூர், ஆக.1
வேலூர் மாவட்டம் ரோட்டரி கிளப்ஸ் ஆஃப் வேலூர் சங்கம் சார்பில், செயின்ட் மேரீஸ் பள்ளியில் மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு மற்றும் வினாடி -வினா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் தொழிற்பணி மாவட்ட தலைவர்கள் டி. கே. சரவணன், வழக்கறிஞர் ராஜ்குமார், பஸ் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் கணேஷ், டி.வி.டி. ஆனந்த் ஆகியோர் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், ரோட்டரி சங்கத் தலைவர்கள் விஜயா, பாலமுருகன், ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment