ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பு நடுத்தர மக்கள் மீது தாக்குதல் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகை விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் தழுவிய CPi ( M ) C P I C PI ML சார்பில் மறியல் போர்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 1 August 2024

ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பு நடுத்தர மக்கள் மீது தாக்குதல் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகை விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் தழுவிய CPi ( M ) C P I C PI ML சார்பில் மறியல் போர்!

குடியாத்தம் ஆகஸ்ட் 1

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர் எஸ் ரோடு ஸ்டேட் பேங்க் வங்கி எதிரில் ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பு நடுத்தர மக்கள் மீது தாக்குதல் கார்பெட் முதலாளிகளுக்கு சலுகை மழை பொது விநியோக முறை பாதுகாத்திட 100 நாள் வேலையில் சீரழிக்காது விலைவாசி உயர்வை கண்டித்து மறியல் போர் நடைபெற்றது.

பட்ஜெட்டை கண்டித்தும் தமிழகம் தழுவிய போராட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் எஸ் டி சங்கரி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஏசி பிரேம் குமார் சிபிஐ எஸ் வாசுதேவன் ஆகியோர் தலைமை தாங்கினார்.

பி குணசேகரன் சிஎம் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர் பி காத்தவராயன் தாலுகா செயலாளர் எஸ் சிலம்பரசன் பேர்ணாம்பட்டு மற்றும் குடியாத்தம் தொழிற்சங்க செயலாளர் சி சரவணன்
மாவட்ட துணை செயலாளர் தாலுகா செயலாளர் டி ஆனந்தா எம் விஜயகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
ஒன்றிய நிதி நிலை அறிக்கையில்  தமிழ்நாடு புறக்கணிப்பு
ஏழை நடுத்தர மக்கள் மீது தாக்குதல்
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகை மழை
பொது விநியோக முறையை பாதுகாத்திட
100 நாள் வேலையை சீரழிக்காதே விலைவாசி உயர்வை பாதுகாத்திடு மக்களின் அடிப்படை தேவைகளை புறக்கணித்த ஒன்றிய அரசசை கண்டித்து   மறியல் போா்   இதில் 100 க்கு மேற்பட்டவர்கள் சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர் பின்னர் அனைவரும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர் மாலை அனைவரையும் விடுவித்தனர். 


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad