காட்பாடி காவல் நிலையத்தில் கடந்த 22 ஆம் தேதி கஞ்சா வழக்கில் கை விலங்குடன் தப்பியோடிய கைதி உட்பட 3 பேர் கைது! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 24 August 2024

காட்பாடி காவல் நிலையத்தில் கடந்த 22 ஆம் தேதி கஞ்சா வழக்கில் கை விலங்குடன் தப்பியோடிய கைதி உட்பட 3 பேர் கைது!

காட்பாடி ஆக 24 

வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலையத்தில் கடந்த 22 ஆம் தேதி கஞ்சா வழக்கில் கை விலங்குடன் தப்பியோடிய கைதி உட்பட 3 பேர் கைது
பதுங்கி இருந்த 4 பேரையும்  சுற்றிவளைத்து தட்டி தூக்கிய தனி படை போலீசார் நான்கு பேரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா 1600 ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல்

வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு பகுதியைச் சேர்ந்தவர் கமலேஷ் (வயது 19). இவர் கஞ்சா வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் இந்த நிலையில் காட்பாடி காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் பரத் மற்றும் தலைமை காவலர் புகழேந்தி ஆகியோர் கஞ்சா வழக்கு தொடர்பாக கமலேஷ்  கடந்த  22.08.2024 காலை பிடித்து அழைத்து வந்து காவல் நிலையத்தில் கைவிலங்கிட்டு அமர வைத்திருந்தனர்.காவல் நிலைய (பாரா) பாதுகாப்பு பணியில் காவலர் உதவி ஆய்வாளர் மணிகண்டன் இருந்துள்ளார்.

இதற்கிடையில், காவலர் மணிகண்டன் அசந்த நேரத்தில் டிமிக்கி கொடுத்து விட்டு கைவிலங்குடன் விசாரணை கைதி கமலேஷ் தப்பி ஓடியுள்ளார்
இந்த நிலையில் காவல் நிலையத்திற்க்கு அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் விசாரணை கைதி கமலேஷ் தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இதனை அடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின் பேரில் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தப்பி ஓடிய விசாரணை கைதி கமலேஷ் என்பவனை தேடி வந்தனர்

இந்த நிலையில் காட்பாடி அடுத்த மூலக்கசம் பகுதியில் கைவிடப்பட்ட கட்டிடத்தில் கமலேஷ் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்று சுற்றி வளைத்து தாராபடவேடு குளத்தக்கரை பகுதியை சேர்ந்த கமலேஷ் (வயது 19)காட்பாடி கன்னிகோவில் தெரு மேடு பகுதியைச் சேர்ந்த மாதவன்(வயது 19), காட்பாடி கன்னி கோவில் தெரு மேடு பகுதியை சேர்ந்த அருண் (வயது 21), காட்பாடி பள்ளி குப்பம் பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 19) ஆகிய நான்கு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா 1600 ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து காட்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

சமீபத்தில் தமிழகம் முழுவதும்  12-காவல் நிலையங்கள் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட காட்பாடி காவல் நிலையத்திலிருந்து விசாரணை கைதி கைவிலங்குடன் தப்பி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இனியாவது போலீசார் வரும் காலங்களில் கவன குறைவாக இல்லாமல் உஷாராக பணியில் இருக்க வேண்டும் என மாவட்ட எஸ்பி மதிவாணன் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார்.


வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad