தனியார் நர்சிங் கல்லூயில் முதலாம் ஆண்டு மாணவி மாயம் போலீசார் விசாரணை! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 19 August 2024

தனியார் நர்சிங் கல்லூயில் முதலாம் ஆண்டு மாணவி மாயம் போலீசார் விசாரணை!

வேலூர் ஆக.19

வேலூர் மாவட்டம் சங்கரன் பாளையத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகின்ற மாணவி மாயம்  

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தென்கடப்பந்தாங்கல் சென்ன சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர்  18வயது மாணவி. இவர் வேலூர் சங்கரன் பாளையத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பி. எஸ். சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் விடுதியில் தங்கி கல்லூரி செல்வது வழக்கம் இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி மாணவி கல்லூரி விடுதியில் இருந்து வெளியே சென்றார். பின்னர் மீண்டும் விடுதிக்க திரும்பி வரவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்  தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad