காப்பீட்டு திட்டத்தினை அரசே ஏற்று நடத்த கோரி செப்டம்பர் 3 இல் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 11 August 2024

காப்பீட்டு திட்டத்தினை அரசே ஏற்று நடத்த கோரி செப்டம்பர் 3 இல் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்.

வேலூர் ஆக 11

வேலூர் மாவட்டம் பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று மதுரை மூட்டா அலுவலக வளாகத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அரங்கில் நடைபெற்றது.

இன்றைய நிகழ்வுக்கு மாநிலத் தலைவர் கோ.முரளிதரன் தலைமை தாங்கினார். முன்னதாக மாநில பொதுச் செயலாளர் ந.பர்வதராஜன் வரவேற்று மாநில செயல்பாடுகள் குறித்த வேலை அறிக்கையினை சமர்ப்பித்து பேசினார்.
வேலை அறிக்கையினை மாநில பொதுச்செயலாளர் ந. பர்வதராஜன் வெளியிட செயற்குழு உறுப்பினர் ஜனார்த்தனன் மாவட்ட செயலாளர் ஏ.அப்துல் ரஹீம் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். 
 
மாநில பொருளாளர் ப.கிருஷ்ணன் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்து பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் செ.நா. ஜனார்த்தனன், மாவட்ட செயலாளர் ஏ அப்துல் ரஹீம் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன் உள்பட 30 மாவட்டங்களைச் சார்ந்த செயலாளர்கள் மாநில செயலாளர்கள் பேசினர்.
மாநிலத் தலைவர் கோ.முரளிதரன் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராவிட்டால் பல்வேறு ஓய்வு பெற்ற ஆசிரியர் அலுவலர்  சங்கத்துடன் இணைந்து போராடுவோம் என்றும் அரசு வாக்குறுதி அளித்ததை போல புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு இன்னமும் வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி நிலுவை தொகையினை தொகையினை உடனே வழங்க வேண்டும் காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார். 

பின்னர் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது 

1.காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களையவும் பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறக் கூடிய வகையில் புதிய காப்பீட்டு திட்டத்தினை நடைமுறைப்படுத்தவும் இத்திட்டத்தினை அரசே ஏற்று நடத்திட கோரியும் மாநில அளவில் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் செப்டம்பர் மூன்றாம் தேதி  தர்ணா போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

2.தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை போல ஓய்வு பெற்ற அனைவருக்கும் 80 வயது துவக்கத்திலேயே ஓய்வூதியத் தொகையினை இருபது சதவிகிதம் உயர்த்தி வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 

3. கேரளா மாநிலம் வயநாடு பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து கேரள மாநில அரசுக்கு நிதி உதவி அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது 

4.கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு உயிரிழந்த குடும்பத்தினருக்கும் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்க முன்னாள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது 

5.செப்டம்பர் 28ஆம் தேதி தேனி மாவட்டத்தில் மாநில பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது 

6.நவம்பர் மாதம் 30 ஆம் தேதி பெண் ஆசிரியர்கள் மாநாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

இறுதியில் மாநில துணைப் பொதுச் செயலாளர் டி மனோகர ஜஸ்டஸ் நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad