5 சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணிகள் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 20 August 2024

5 சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணிகள்

வேலூர் ஆக 20

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வரும் 01.01.2025 ஆம் தேதியை தகுதியேற்பு நாளாக கொண்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு 06.01.2025-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகளில் முதற்கட்டமாக, 20.08.2024-ம் தேதி முதல் 18.10.2024 -ம் தேதி வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் விவரங்களை சரிபார்க்க உள்ளனர். இதனைத் தொடர்ந்து 29.10.2024 -ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. எனவே இப்பணியை சிறப்பாகவும் விரைவாகவும் மற்றும் 100% தூய்மையாகவும் மேற்கொள்ள தங்கள் பகுதிக்கு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விவரங்களை அளித்து ஒத்துழைப்பு நல்குமாறு பொதுமக்களை வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்  வே.இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad